நன் கொடையாளர்கள்


ஒப்பற்ற ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.

அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையாலும் தாங்களைப்போன்றவர்களின் பேராதவராலும் இந்நிறுவனங்கள் சிறப்பாக இயங்கிவருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.
தர்ம சிந்தனை உள்ள தங்களைப்போன்றவர்களின் உதவிகளைத் தவிர இந்த அறக்கட்டளைக்கு.  நிரந்தர வருமானம் எதுவுமில்லை. ஆகையால் இந்நிறுவனம் சிறப்பாக செயல்பட தாங்களும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் தாராளமாக தங்களது ஸக்காத்,ஸதகா,சந்தா ஆகிய தான தர்மங்களை பணமாகவோ,பொருளாகவோ தந்து உதவவும்.
அல்லாஹ்வின் விருப்பததிற்கேற்ப இப்பணியில் தாங்களும் பங்கெடுத்துக்கொண்டு ஈருலக வெற்றி பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


நன்கொடையாளர்களின் கவணத்திற்கு:-
ஒவ்வொரு மாதம் அல்லது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வரவு சிலவு கணக்கு வெளியிடப் படும். அவ்வாறு வெளி இடும் பொழுது பணம் கொடுத்தவர்கள் பெயரை வெளியிடுவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. முதலில் பணம் கொடுப்பவர்கள் தன் பெயர் வெளி வருவதை விரும்பாமல் இருக்கலாம்.ரெண்டு பணம் கொடுக்க முடியாதவர்கள் மனம் வருத்தப்படலாம். அதே நேரம் பணம் கொடுத்தவர்களுக்கு தங்கள் பணம் கணக்கில் வந்துவிட்டது என்று தெரிவது மிக முக்கியமானது. இல்லாவிட்டால் நம்பகத்தன்மை கடுமையாக அடி வாங்கும்.எனவே இதை சமாளிக்க ஒரு யுக்தி முடிவு செய்யப்பட்டுள்ளது...

டிரஸ்டில் சேரும் உறுப்பினர்கள் ஓவ்வொருவருக்கும் அடையாள எண் வழங்கப் படும். அதை தயவுசெய்து அடுத்தவர்களுக்கு தெரிவிக்காதீர்கள். கணக்கு வழக்கு வெளியிடும் பொழுது எண் 1 இவ்வளவு வழங்கினார், எண் 101  இவ்வளவு வழங்கினார் என்று இருக்கும்.எனவே யார் எவ்வளவு கொடுத்தார் என்று அடுத்தவருக்கு தெரியாது. அதே சமயம் கொடுத்தவருக்கு தான் கொடுத்தது கணக்கில் வந்துவிட்டது என்பது புரியும். இதில் முக்கிய விஷயம் யார் யாரினால் கொடுக்க முடியவில்லை என்பதும் யாருக்கும் தெரியாது...சோ நிறைய குழப்பங்கள் தவிர்க்கப்படும்!.

சுஹைனா  நெல்லிக்குப்பம். ஒரே ஒரு சின்ன கேள்வி...?.  இந்த டிரஸ்ட்டுக்கு யாரும் பணம் கொடுக்க விரும்பினால், அது எந்த கணக்கில் சேரும்... (ஜகாத், ஹதியா)? ஜக்காத் நிதியை இதில் சேர்த்தால், அதை “ஜகாத்” கடமையானவர்களுக்கு மட்டும் செலவு செய்ய இந்த டிரஸ்ட் பொறுப்பேற்றுக் கொள்ளுமா?.

பதில் “ஜகாத் வளரும்பெருகும்” என்பது அல்லாஹ்வின் வாக்கு (திருக்குர் ஆன் 30:39, 22:76) இந்த வசனங்களில். “ஜகாத்” கொடுப்பவர்களுக்கு மட்டுமின்றி “ஜகாதுடன் தொடர்புடைய, அனைத்திற்கும். பயன் உண்டு என்று கூறுகிறது. அதவது, “பலமடங்கு பெருகும், பலமடங்கு வளரும்” என்று பரந்து விரிந்த பொருள் கொண்டது…!

“ஜகாத்தை” தானமாகவோ தர்மமாகவோ, கொடுத்தால் “ஜகாத்” வளர்வதற்கு வாய்பே இல்லை. இந்த “ஜமாத்துல் முஸ்லிமீன்” அறக்கட்டளைக்கு உங்கள், “ஜகாத்தை” கொடுத்தால் முழுமையான. ஒரு வட்டி இல்லாத. “ஜமாத்துல் முஸ்லிமீன்” பைதுல்மால் ஆரம்பிக்கப் பட்டு, அது கொடுமையான வட்டியில் அல்லல் படும் ஏழைகளுக்கு, வட்டி இல்லாமல் கொடுத்து. அவர்களின் முன்னேற்றத்திற்கு, உதவ முடியும்.

உதரணத்திற்கு, ஒருவர் “பத்து ஆயிரம்” ஜமாத்துல் முஸ்லிமீன்” பைதுல்மாலில் கடன் பெற்று தொழில் செய்கிறார்….! என்றால். அவர் தினமும் 50. ரூபாய் திருப்பி பைதுல்மாலில் திருப்பி செலுத்தினால். பத்து நாளில் பைத்துல்மாலில், 500. ரூபாய் சேர்ந்து விடும். இதை இன்னொரு. உதவி தேவைப்படும். ஏழைக்கு உதவ முடியும். இப்போது 500. ரூபாய் கடன் வாங்கியவர் தினமும் 5.ரு திருப்பி செலுத்தினால். இப்போது. 10. ஆயிரம் வாங்கியவர் மூலம், 50. ரூபாய்யும். 500. ரூ வாங்கியவர் மூலம், 5. ரூபாய்யும், 50+5. மொத்தம் 55. ரூபாய், பத்து நாளில். 550. ரூபாய் பத்து நாளில் பைத்துல்மாலில், 550. ரூபாய் சேர்ந்து விடும். இதை இன்னொரு. உதவி தேவைப்படும். ஏழைக்கு உதவ முடியும்.

இப்போது வட்டி இல்லாமல் இயங்கும் “ஜமாத்துல் முஸ்லிமீன்” பைதுல்மாலில் தினமும் 60.50 அறுபது ரூபாய் ஐம்பது காசுகள் சேர்ந்து விடும், இதை இன்னொரு ஏழைக்கு கடனாக கொடுக்க முடியும்…?. இவ்வாறு “ஜகாத்” வளர்ந்து கொண்டே போகும். இதில் குர் ஆன் கூறும் எட்டுப் பிரிவினர்களும், பயன் அடையா முடியும். இதில் உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களும் பயன்பெற முடியும்…!

”ஜகாத்தை” இலவசமாக ஏழைகளுக்கு கொடுத்தால். அவர்களுக்கு இது பத்து நாட்களுக்கு. தேவையை பூர்த்தி செய்ய உதவுமே தவிர? அவர்களும் வளர்ந்து, “ஜகாத்” கொடுக்கும் வழமைக்குக்கு கொண்டு செல்லாது.

இதை கருத்தில் கொண்டே “ஜகாத்” பொருள் பணமாக மாற்றப்பட்டு, உரியவர்களுக்குச் செல்லும். உதரணத்திற்கு தையல் இயந்திரத்தை, ஜமாத்துல் முஸ்லிமீன்” அறக்கட்டளை. “ஜமாத்துல் முஸ்லிமீன்” பைதுல்மால் “ஜகாத்” நிதியில் இருந்து இலவசமாக கொடுக்காது. இலவசமாக கொடுக்கும் பொருட்களுக்கு “மக்கள்” மத்தியில் மதிப்பும் இருக்காது.

பரந்து விரிந்த பொருள் கொண்ட “ஜகாத்” திட்டம் வளரவும் செய்யாது. இதன் அடிப்படையில் “ஜமாத்துல் முஸ்லிமீன்” அறக்கட்டளைக்கு நீங்கள் அளிக்கும் ஜகாத் நிதி வளர்ந்து கொண்டே செல்லும். அது “ஜகாத்தின்” உண்மையான நோக்கத்தை அடையும் இன்ஷா அல்லாஹ். நீங்கள் “ஜகாத்” கொடுக்கும் நிறுவனங்களின் பெயர்களில் “ஜமாத்துல் முஸ்லிமீன்” அறக்கட்டளையையும் நினைவில் வையுங்கள். மேலும் விவரங்களுக்கும். தொடர்புக்கும். கிழே உள்ள பாரத்தை நிறப்பி அனுப்புங்கள்.



தங்களது D.D.,M.O, Cheque ஆகியவற்றை ஜமாத்துல் முஸ்லிமீன் என்ற பெயரில் மட்டும் அனுப்பவும்.
ICICI A/C :NO:0000
IOB A/C :NO:0000
1/150 WEST STREET, S.P.PATTINAM, RAMNAD TAMILNADU INDIA-623406
தங்களது நன்கொடைகள் வருமான வரி விலக்கிற்கு உட்பட்டது.
(approved by the Inccomee Tax Dept.U/S 80G(5)