சட்ட உதவிகள்

அனைத்துச் சமுதாய மக்களுக்கும். எதவது ஒரு வகையில் தனது பங்களிப்பை செய்து வரும். “ஜமாத்துல் முஸ்லிமீன் அறக்கட்டளை” நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள். சமிபத்தில் ஒரு அதிர்ச்சி தரும் சம்பவங்களை நேரில் கண்டு மனம் வெதும்பினார்கள்.

ஒரு பெண்ணை அவள் கணவன் அவள் மேல் மண்ணெணையை ஊற்றி தீவைத்து விட்டான். உடனே அப்பெண்ணின் மருத்துவத்திற்கு உதவும் என்னத்துடன் களம் இறங்கிய. நமது சகோதரர்கள். அப்பெண்ணிடம் இந்த அவள நிலைக்கு என்ன காரணம் என்று. விசாரித்தனர். அப்பெண்ணின் மரண வாக்கு மூலம்.

எனக்கு கல்யாணம் ஆகி ஏழுவருஷம் ஆச்சு. கல்யாணம் ஆன புதிதில் என்னை நல்லா வச்சிருந்த என் கணவர். நாட்கள் செல்ல செல்ல. குடிக்க ஆரம்பித்து விட்டார், இதனால் குடும்பத்தில் குழப்பம் அதானல். பலதடவை பிரச்சனைகள் ஆகி பஞ்சாயத்து வைத்து வைத்து அவருடன். என்னை சேர்த்து வைப்பார்கள். ஆனால் அவர் திருந்தவே இல்லை, இன்று குடித்து விட்டு வந்து அடித்தார், உன்னிடம் வாழ்வதற்கு நான் செத்துப் போவதே மேல். என்று நானே வீட்டில் இருந்த மண்ணெண்ணையை நானே எடுத்து என் உடம்பில் ஊற்றிக் கொண்டு. என்னை சாகடித்து விடு என்றேன்.

போதையில் இருந்த அவர் பீடி குடிக்கத்தான் தீப்பட்டியை எடுக்கிறார் என்று. நான் அசந்த நேரத்தில். என்னை பத்தவைத்து விட்டார். எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என் குழந்தைகளுக்காக நான் வாழவேண்டும், என்று கூறியதும். அப்பெண்ணின் அறியாமையையும் நினைத்து, அப்பெண்ணுக்கு நம்மால் வருந்தவே முடிந்தது.

அப்பெண்ணிண் குடிகார கணவணை பிடித்து, விசாரித்தால் என் மணைவி என்ன சொல்லுதோ, அதன்படி நடவடிக்கை எடுங்கள் என்று கூறுகிறான். இதன் பின்னர்தான் தெரிந்தது, அப்பெண்ணுக்கு ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தையும், தற்போது ஐந்து மாத கற்பம் என்றும்.

இதை கருத்தில் கொண்ட நமது “ஜமாத்துல் முஸ்லிமீன் அறக்கட்டளை” இது போன்ற சமுக பிரச்சனைகளுக்கு தீர்வுகளை தேடிய போது, சரியான புரிந்துணர்வுடன்”,கட்டமைப்புடன் கூடிய ஒரு ஆலோசனை, கண்டிப்பாக தேவை என்பதை அறிந்து ,மார்க்க அறிஞர்கள், சட்ட ஆலோகர்கள் மனித நல ஆர்வளர்கள், மனோத்துவ நிபுணர்கள், அதற்கு குறிய பிரச்சனைகளை அனுக அந்தந்த துறை நிபுணர்கள் ஆலோசனை அவசியம், என்பதை கருதி, “ஜமாத்துல் முஸ்லிமீன் அறக்கட்டளை” மக்கள் நலன் கருத்தி இப்பனியில் அயராது பாடுபம், சமுக ஆர்வளர்கள் தங்கள் பனிகளுக்கு இடையே, நமது கவணத்திற்கு வரும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை தர இசைவு தெரிவித்து உள்ளனர்.